இலங்கை பிரதான செய்திகள்

நானாட்­டான் பிர­தே­சத்­துக்கு 800 வீடு­கள் தேவை.

மன்­னார், நானாட்­டான் பிர­தே­சச் செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கு இது வரை­யில் 400 வீடு­கள் வழங்­கப்­பட்­ட­போதும், புதி­தாக திரு­ம­ணம் முடித்­த­வர்­கள், நீண்­ட­கா­லம் இடம்­பெ­யர்ந்­த­வர்­கள், முன்­னாள் போரா­ளி­கள், பெண்­ த­லை­மைத்­துவக் குடும்­பங்­கள் என்று நானாட்­டான் பிர­தேச மக்­க­ளின் வீடில்லாக் குறை­களைத் தீர்ப்­ப­தற்கு இன்­னும் 800 வீடு­கள் தேவைப்­ப­டும் எனப் பிர­தே­சத்­தில் திரட்­டிய தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நானாட்­டான் பிர­தே­சத்­தில் சென்ற வரு­டம் அதி­க­மாக வீட்­டுத்­திட்­டங்­கள் தொடா்­பா­கவே மக்­கள் பிர­தி­நி­தி­க­ளி­ட­ மும், அரச அதி­கா­ரி­க­ளி­ட­மும் மக்­கள் முறைப்­பா­டு­கள் செய்­தி­ருந்­த­தாக தக­வல் கிடைத்­ததை அடுத்து, சில கிரா­மத்து மக்­களை நேர­டி­யாக சந்­தித்து கருத்­துக்­கள் கேட்­கப்­பட்­டது.

குறிப்­பாக அச்­சங்­கு­ளம், நறு­வி­லிக்­கு­ளம், கற்­க­டந்­த­கு­ளம், மடுக்­கரை, எரு­விட்­டான் போன்ற கிரா­மங்­கள் உள்­ள­டங்­க­லான மக்­கள் தெரி­வித்­த­தா­வது -போh்க்காலத்­தி­லும் போh் முடிந்த பின்­ன­ரும் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளி­னால் வீட்­டுத்­திட்­டங்­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. இவை ஒரே அள­வான பெறு­ம­தி­யா­னவை அல்ல. அத்­து­டன் முறை­யான தொழி­நுட்ப ஆலோ­ச­னை­க­ளு­டன் கட்­டப்­பட்­ட­வை­யும் அல்ல. அதன்­பின் அர­சின் அனு­ச­ர­ணை­யு­டன் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சி­னால் மூன்று இலட்­சம், ஐந்து இலட்­சம், ஏழரை இலட் சம் என்று பல்­வேறு நிதி­பெ­று­ம­தி­க­ளில் வீடு­கள் வழங்­கப்­பட்­டன.

இவ்­வா­றான செயற்­பா­டு­கள் மூலம் அரசு தமக்கு பார­பட்­சம் காட்­டு­வ­தாக மக்­கள் சிலா் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர். ஏற்­க­னவே சில நிறு­வ­னங்­க­ளின் மூலம் வழங்­கப்­பட்ட வீடு­கள் தரம் இல்­லா­மல் மிக மோச­மாக இருப்­ப­தா­க­வும் மக்­கள் கருத்து தெரி­விக்­கின்­ற­னர்.

அத்­து­டன் அர­சி­னால் வீடு­வ­ழங்­கு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­ப­டும் புள்ளி இடல் செயற்­பாட்­டில், மக்­கள் அதி­ருப்தி கொண்­டுள்­ள­னர். ஏனெ­னில் எல்­லா­வி­த­மான சமூக பௌ­தீக தக­வல்­கள் அதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. மேம்­போக்­கான செயற்­பா­டு­க­ளால் உண்­மை­யான வீட்­டுத் தேவை உடை­யோ­ருக்கு வீடு­கள் வழங்­கப்­ப­டா­மல், பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது தொடர்­பான விட­யங்­க­ளில் அதி­கா­ரி­கள் உரி­ய­க­வ­னம் எடுக்க வேண்­டும் என­வும் மக்­கள் கேட்­டுக்­கொள்­கின்­ற­னர்.

அரசு வீட்­டுத்­தொ­கு­தி­களை அமைத்­துக் கொடுத்து, அர­சி­யல் இலா­பம் கரு­தப்­பார்க்­கி­றது.

வீட்­டுத் தேவை உடை­ய­வர்­க­ளுக்கு அவர்­க­ளின் சொந்தக் காணி­க­ளில் வீடு­கள் வழங்க வேண்­டும் என­வும், பெரு­வா­ரி­யான மக்­கள் கேட்டு நிற்­கின்­ற­னா்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.