உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவின் புளோரிடாவில் விபத்து, 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி..

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இரண்டு பாரவூர்திகள் வான் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து டிஸ்னி வேர்ல்ட் பகுதிக்கு குழந்தைகளை வான் ஒன்றில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற போது எதிரே வந்த இரண்டு பாரவூர்திகள் மோதியதில் வான் தீப்பிடித்து எரிந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஊயிரிழந்த குழந்தைகள் 9 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் காயம் அடைந்துள்ளநிலையில் அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படம்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதிய பாரவூர்திகளின் சாரதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.