உலகம் பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பல வீடுகள் குலுங்கியதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகள் மற்றும் திறந்தவெளிகளில் தஞசமடைந்துள்ளனர். இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பதுடன் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையில் கடந்த மாதம் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 400-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.