இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன்…

வடமாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின்  பணிப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் கடமையாற்றிய கலாநிதி சுரேன் ராகவனுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி சுரேன் ராகவன், பத்தி எழுத்தாளரும் அரசியல் விமர்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலாநிதி சுரேன் ராகவன் செயின்ட் பால் – ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையின் விசேட ஆராய்ச்சி ஆய்வாளர்.

சர்வதேச அரங்கில் 25 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளதுடன் நூல்களையும் எழுதி உள்ளார். அவற்றில் அண்மையில் வெளியான  The Buddhist Monks and the Politics of Lanka’s Civil War (Equinox – UK), and Post -War Militancy of Sinhala Saṅgha: Reasons and Reactions (Oxford University Press (North America) [co-edited]. என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

இதேவேளை கலாநிதி ராகவன், கல்வியியல் ஆய்வுகளுக்கான கொழும்பு கலிவியியல் அமைப்பின் தலைவராகவும், தேசியப் பணிப்பாளராகவும் உள்ளார். அவர் திரைப்படத் துறையை  நேசிக்கும் அவர் OCIC, தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு மற்றும் ஆசிய சினிமா மையம் உள்ளிட்ட திரைப்பட விழக்களின்  ஜூரி உறுப்பினராக பணியாற்றியுள்ளார்..

வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்…

வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன்,


சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க,
ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன்

ஆகியோர் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.