இலங்கை பிரதான செய்திகள்

மிக் விமானம் – கோத்தபாய – லசந்த – தொலைக்காட்சி நிகழ்ச்சி – குற்ற விசாரணை….


மிக் விமானம் கொள்வனவுத் தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கோத்தபாய ராஜபக்ஸ இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் இரகசிப் காவற்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிக்ழச்சியின் நகல் ஒன்றைப் பெற்றுத் தருமாறு நீதிமன்றம் ஊடாக குறித்த தொலைக்கட்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் சுதந்திரம் தொடர்பிலேயே கோத்தபாய ராஜபக்ஸ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க 2007 ஆம் ஆண்டு மிக் விமான கொள்வனவுத் தொடர்பில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கொல்லப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.