Home இலங்கை 2018 இல் 1,229 மரண தண்டனைக் கைதிகள்

2018 இல் 1,229 மரண தண்டனைக் கைதிகள்

by admin

கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, மேன்முறையீடு செய்துள்ள 1,299 கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனரென, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் 1,215 ஆண்களும் 84 பெண்களும் உள்ளடங்குவதாகவும் இவர்களில் 789 ஆண் கைதிகளும், 34 பெண் கைதிகளும் மேன்முறையீடு செய்துள்ளனர் எனவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனைக்கு உட்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலையில் 476 கைதிகள் உள்ளனர் எனவும், அவர்களில் 426 ஆண்களும் 50 பெண்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More