இலங்கை பிரதான செய்திகள்

அனுமதி மறுக்கப்பட்ட மாணவனுக்கு, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி… இணைப்பு 2…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

இவ்வருடம் தரம் ஆறுக்கு தனது மகனை கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்து தந்தையொருவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தார்.

குறித்த முறைபாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு நேற்றைய தினம்(11-01-2019) கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர், கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர் மற்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்திருந்தது.

விசாரணையின் நிறைவில் கிளிநொச்சி நகரில் பழைய கச்சேரிக்கு பின்புறமாக வசிக்கின்ற த.குயிலன் என்ற மாணவனுக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி வழங்குமாறும் அதுவே நியாயத் தன்மையானது என்று தெரிவித்து குறித்த மாணவனை எதிர் வரும் 17 ஆம் திகதி பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுதியுள்ளது.

குறித்த மாணவன் தரம் ஐந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை யாழ் அச்சுவேலியில் இருந்து கிளிநொச்சியில் உள்ளன பாடசாலையில் ஒன்றில் க.பொ.த உயர்தரத்திற்கு இணைந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட மாணவன் ஒருவனும் மனித உரிமைக்ள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு கவனத்தில் எடுக்கப்பட்டு மாணவனின் விசாரணை மேற்கொண்ட போது மாணவன் அச்சுவேலியிலிருந்து கிளிநொச்சியில் உள்ள பாடசாலையில் சேர்வதற்காக முன் வைக்கப்பட்ட காரணங்கள் நியாயத்தன்மையற்றது என்ற காரணத்தினால் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாட்டை தள்ளுபடி செய்து விட்டது.

கிளிநொச்சி – வலயக் கல்விப் பணிப்பாளர், இரு அதிபர்களை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்தது…

Jan 11, 2019 @ 04:15

கிளிநொச்சியில் தரம் ஆறில் மாணவன் ஒருவருக்கு அனுமதி வழங்காத விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி மகா வித்தியாலம் ஆகிய பாடசாலை அதிபர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பானை அனுப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 11-01-2019 காலை பத்து மணிக்கு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு விசாரணைக்கு வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி. கனகராஜ் அழைப்பானை அனுப்பியுள்ளார்.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஐந்து வரை கல்வி பயின்ற கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு பின் புறமாக வசிக்கின்ற த. குயிலன் என்ற தனது மகனுக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும், கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் அனுமதி கேட்டு சென்ற போது தரம் ஆறுக்கு சேர்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பில் வலயக் கல்விப் பணிமனையிடம் முறையிட்ட போது அவர்களும் எதுவும் செய்ய முடியாது என கைவிட்டுவிட்டனர் எனத் தெரிவித்து தந்தை க. தங்கவேல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டமைக்கு அமைவாக இவ் அழைப்பானை அனுப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்தில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை சுட்டடிக்காட்டத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.