Home சினிமா இந்தியன்- 2 படத்தில் கமலுக்கு வசனம் எழுதிய மூன்று எழுத்தாளர்கள்!

இந்தியன்- 2 படத்தில் கமலுக்கு வசனம் எழுதிய மூன்று எழுத்தாளர்கள்!

by admin

 

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் பிரபல நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் மூன்று தமிழ் எழுத்தாளர்களை வசனங்களை எழுதியுள்ளதாக இந்தியன் 2 படக் குழு கூறியுள்ளது.


1996இல் கமல்ஹாசன் நடிக்க, இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். தந்தை, மகன் என இரு வேறு பட்ட கதாபாத்திரங்களில் இப் படத்தில் கமல் நடித்தார். இலஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று வரையில் இப் படம் புகழ் பெற்று விளங்குகின்றது. இந்த நிலையில் 22 ஆண்டுகள் கமலும் சங்கரும் இணைந்து இந்தியன் 2 படத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக  காஜல் அகர்வால்  நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் முதல் புகைப்படத்தை  (பர்ஸ்ட் லுக் போஸ்டர்) வெளியிட்டுள்ளது படக்குழு. ஜனவரி 18ஆம் திகதி இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு துஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் படக் குழு அறிவித்துள்ளது.

இப்படத்துக்காக தனது உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் கமல். படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கலை இயக்குநர் முத்துராஜ். இந்த நிலையில் இப் படத்தில்றாக எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.


Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More