இலங்கை பிரதான செய்திகள்

இராணுவத்தளம் அமைத்ததாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மையில்லை :

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடுவதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் உண்மை இல்லை என கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் திருகோணமலையில், இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக சுதந்திரக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அதனை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

இலங்கையில் இராணுவத் தளத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக வெளியான தவறான செய்திகளை அமெரிக்க தூதரகம் அறிந்திருப்பதாகவும் எனினும் இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன் (Nancy Van Horne) தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்க மற்றும் இலங்கை இராணுவ ஒத்துழைப்பானது, அனர்த்த தயார் நிலை, நிவாரணம், கடல் பாதுகாப்பு பயிற்சி, மற்றும் பயிற்சிகளை வலுப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதேயன்றி, அமெரிக்காவின் தளம் ஒன்றை அமைப்பது, அதன் ஒரு அங்கமாக இருந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

; இராணுவத் தளம் ஒன்றை நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை எனவும் அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் மேலும் தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.