பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – சிமோனா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச், ருமேனியாவின் சிமோனா ஹாலப் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகின்ற நிலையில் 6-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் டெனிஸ் ஷபலோவை எதிர்த்து விளையாடிய முதல் நிலை வீரரான ஜோகோவிச் 6-3, 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றில் நுழைந்துள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை 6-2, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதேவேளை மரியா ஷரபோவா அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஷ்லெய்க் பேர்ட்டியை எதிர்கொண்டு 6-4, 1-6, 4-6 என தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.