நீண்டநாள் பதவியில் இருக்கமாட்டேன் எனவும் மிக விரைவில எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேறிச் செல்வேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேலும் இந்த இடத்திலிருந்து மிக விரைவில் செல்வதே தனது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்துக்கு சென்ற அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னரேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்கு எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் படம் ஒரு இடத்திலும் ரணில் விக்கிரமசிங்கவின் படம் நான்கு இடங்களிலும் இருக்கின்றது என சுட்டிக்காட்டிய விமல்வீரவன்ஸ ரணிலின் படம் 5ஆவது தடவையாகவும் இங்கு மாட்டப்பட வேண்டுமென பிரார்த்திக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment