பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டியில் மோதும் ஜாகோவிச் – நடால்


மெல்பேர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜாகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் முதல்தர வீரரான நோவக் ஜோகோவிச் பிரான்சின் லூகாஸ் பவுலியை எதிர்கொண்ட நிலையில் ஜோகோவிச் 6-0, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்தநிலையில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் 2-ம் நிலை வீரரான ரபேல் நடாலை எதிர்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.