பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் – மஞ்சு வாரியர் நடிக்கும் அசுரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. `வடசென்
இந்தத் திரைப்படத்தில் தனுஷிற்கு நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கின்றார். இத் திரைப்படத்தின் முதல் புகைப்படத்தை (பர்ஸ்ட் லுக்) சுவரொட்டியை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் தனுஷ் கையில் வேல் கம்புடன் கோபத் தோற்றத்தில் காணப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று வெளியான மற்றொரு போஸ்டரில் தனுஷ் – மஞ்ச வாரியர் இருவரும் 1980களில் இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் மற்றும் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜாக்கி கலை பணிகளை மேற்கொள்கிறார். ஆடுகளம், வடசென்னை என வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணித் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment