இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் புதிய உப புகையிரத நிலையம் திறப்பு

 

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் நாளை ஞாயிற்றுக்கிழமை  (27) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அ மைச்சர் அர்ச்சுன ரணதுங்கவினால்   திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் வாங்கிய , இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த புதிய  உத்தரதேவி   புகையிரத   சேவையாக கொழும்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையில் சேவையினை ஆரம்பிக்கவுள்ளது. இந்த    புகையிரத    சேவை அமைச்சரால் மருதானை   புகையிரத   நிலையத்தில் ஆரம்பித்து வைப்பதுடன். யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர்   புகையிரதத்தில்   பயணிக்கவுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைஅருகில் இந்த புகையிரத நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உத்தரதேவி, யாழ்தேவி, இரவு தபால் புகையிரதம்  ஆகியன நிறுத்தப்படவுள்ளன.

புதிய புகையிரதம் 30 ஆம் திகதி சேவையினை ஆரம்பிக்குமென தெரிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே 27 ஆம் திகதி தொடக்கம் கொழும்பு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையில் சேவையில் ஈடுபட்டுள்ளது.

மருதானையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு  புறப்பட்டு    யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடைந்து காங்கேசன்துறை புகையிரத நிலையத்துக்கு பயணிக்கும். பின்னர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

இதில் அமைச்சர் உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் முக்கிய அதிதிகளும் வருகைதரவுள்ளனர். திங்கட்கிழமை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு முற்பகல் 11. 50 இற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு காலை 6.10 இற்கும் சேவையில் ஈடுபடும்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.