Home உலகம்  பெற்றோர், காதலி உட்பட 5 பேர், அமெரிக்க இளைஞரால் சுட்டுக்கொலை…

 பெற்றோர், காதலி உட்பட 5 பேர், அமெரிக்க இளைஞரால் சுட்டுக்கொலை…

by admin


அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலம் லூசியானாவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டுக்கொன்று தப்பிய இளைஞரை காவற்துறையினர் தேடி வருகின்றனர்.

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான லூசியானாவின் கொன்சாலெஸ் நகரைச் சேர்ந்த, 51 வயதுடைய எலிசபெத் தேரியட் மற்றும் கெய்த் தேரியட் இந்த தம்பதியின் மகனான 21 வயதுடைய டகோட்டா தேரியட் என்பவரே தனது பெற்றோர் உள்ளிட்ட ஐவரை சுட்டுக்கொன்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அருகே உள்ள மற்றொரு பகுதியில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் 43 வயதுடைய பில்லி எர்னெஸ்ட், 17 வயதுடைய டேனர் எர்னெஸ்ட் மற்றும் சம்மர் 20 வயதுடைய எர்னெஸ்ட் என தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் டகோட்டாவின் காதலி என கூறப்படுகிறது.

இந்தத் தொடர் கொலைகளை மேற்கொண்ட டகோட்டா, பின் தப்பி சென்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொடர்ந்து காவற்துறையினர் டகோட்டாவை தேடிவருவதாக அறிவிக்கப்பட்டள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More