Home பிரதான செய்திகள் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி :

இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி :

by admin


பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதல் துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகளுகள் அணி முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களை எடுத்த அதே வேளை இங்கிலாந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

இதனையடுத்து 212 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ஓட்டங்கை பெற்ற நிலையில் விளையாட்டினை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 628 ஓட்டங்கள் வெற்றிஇலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதனால் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றியீட்டியுள்ளது

இரு அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட் எதிர்வரும் 31ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More