இலங்கை பிரதான செய்திகள்

பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியை, எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பார்….


பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ பங்கேற்கமாட்டாரென, மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டரா இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவருக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மகிந்த ராஜபக்ஸவுக்கு தேசிய தினத்தில் கலந்துக்கொள்வதற்காக அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதில் கலந்துக்கொள்வதா, இல்லையா? என்பது குறித்து மஹிந்த ராஜபக்ஸ இன்னும் தீர்மானிக்கவில்லையென, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.