சினிமா பிரதான செய்திகள்

அமெரிக்க திரைப்பட விழாவில் காலா, பரியேறும் பெருமாள், கக்கூஸ்


அமெரிக்காவில் நடைபெறும் தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழாவில் காலா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட திரைப்படங்களும், கக்கூஸ் என்ற ஆவணப்படமும் திரையிடப்படுகின்றது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் முதலாவது ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ இடம்பெறவுள்ளது.

சர்வதேச அளவில் வெளியான தலித் சமூகம் சார்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்களில் இருந்து முக்கியமான படங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது.

இதில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய தமிழ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், சாய்ரத், ஃபான்றி படங்களை இயக்கிய மராத்தி இயக்குனர் நாகராஜ் மஞ்சுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் இந்தியாவில் இருந்து கௌரவம் செய்யப்படவுள்ளனர்.

தமிழில் வெளியான காலா, பரியேறும் பெருமாள் படங்களும், கக்கூஸ் ஆவணப்படமும் திரையிடப்படவுள்ளன. மலையாளத்தில் இருந்து ‘பபிலியோ புத்தா’ திரைப்படம் இந்த திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.இந்த பட்டியலில், ‘மாசான்’, ‘ஃபேண்ட்ரி’, ‘போலே இந்தியா ஜெய் பீம்‘ ஆகிய திரைப்படங்களும் இடம்பிடித்துள்ளன.
‘காலா’ திரைப்படத்தில் தலித்துகளுக்கான நிலம் சார்ந்த அரசியல் பேசப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லை வட்டாரத்தில் சமூகத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட சாதிய அடக்குமுறை சார்ந்த காட்சிகள் அப்படியே முன்வைக்கப்பட்டன.

காலா படத்தின் இயக்குனர் ரஞ்சித் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தயாரித்து இருந்தார். இத்திரைப்படங்களுக்கு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா 2019’ கௌரவம் வழங்கியுள்ளது.
மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் குறித்து திவ்யபாரதி இயக்கத்தில் ‘கக்கூஸ்’ தமிழ் ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘வி ஹேவ் நாட் கம் ஹியர் டூ டை’, ‘தி பேட்டில் ஆப் பீமா கோரேகான்’ உள்ளிட்ட மேலும் பல ஆவணப்படங்களும் இங்கு திரையிடப்பட உள்ளன. இதுவே, முதலாவது ஆண்டு, ‘தலித் திரைப்படம் மற்றும் கலாச்சார திருவிழா’ என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers