இலங்கை பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கில், மீள்குடியேற்றப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்…


வடக்கு, கிழக்கு மகாணங்களில் மீள்குடியேற்றப் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன் ஆறறல் அபிவிருத்தி, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (30.01.19) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பிலான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.