சினிமா பிரதான செய்திகள்

இந்தியன் 2 திரைப்படத்தில் ஆர்யா :


இந்தியன் 2’ திரைப்படத்தில் ஆர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் திரைப்படத்தில் இளைஞர் படை மூலமாக கமல்ஹாசன் ஊழலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

1996இல் கமல்ஹாசன் நடிக்க, இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். தந்தை, மகன் என இரு வேறு பட்ட கதாபாத்திரங்களில் இப் படத்தில் கமல் நடித்தார். இலஞ்சம், ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று வரையில் இப் படம் புகழ் பெற்று விளங்குகின்றது. இந்த நிலையில் 22 ஆண்டுகள் கமலும் சங்கரும் இணைந்து இந்தியன் 2 படத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக  காஜல் அகர்வால்  நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோரும் இத் திரைப்படத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அக்‌‌ஷய் குமார், அஜய் தேவ்கன், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றன.

இத் திரைப்படததில் சித்தார்த் நடிக்கவுள்ளதாகவும் நடிகர் ஆர்யாவுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார் இணைந்து ‘இந்தியன் 2’ படத்துக்கான வசனங்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers