குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் விசர் நாய் கடி ஊசி (ஏஆர்வி) போதுமானளவு கையிருப்பில் உள்ளது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் த.காண்டீன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வரை விசர் நாய் கடி ஊசி இலங்கை முழுவதும் கையிருப்பில் இல்லாத நிலைமை காணப்பட்டது . எனினும் எமது மாவட்ட வைத்தியசாலையில் ஏஆர்வி கையிருப்பில் உள்ளது. என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம். எனவும் அவர் தெரிவித்தார்
Add Comment