சவூதி அரேபியாவில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி மன்னரின் பாதுகாப்புத் துறை அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையினால் சவூதி அரேபியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன எனவும் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபுக் நகரில் பல இடங்களில் ஓடும் வெள்ளத்தில் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அவர்களை பல மணி நேரப் போராட்டங்களின் பின்னர் மீட்புப் படையினர் அவர்களை மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெப்பச் சலனம் காரணமாக பல நாடுகளில் ஓரு வருடம் பூராகவும் பெய்ய வேண்டிய மழை ஒருசில நாட்களுக்குள் பெய்து பெரும் வெள்ளத்தை ஏற்படுத்திவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment