ஹட்டன் நோர்வூட் பகுதியில் பெண்ணொருவரை மண்ணெண்ணை ஊற்றித் தீயிட்டுக் கொலை செய்த நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரணதண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான நபர் ஒருவருக்கே இவ்வாறு மரணதண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
குடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் , நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையிலேயே மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண், வைத்தியசாலையில் வைத்து வழங்கிய இறுதி வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பித்தக்கது.
Add Comment