பிரதான செய்திகள் விளையாட்டு

துடுப்பாட்ட தரவரிசையில் ஸ்ம்ருதி மந்தனா முதலிடம்


ஐசிசி நேற்றையதினம் வெளியிட்டுள்ள மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான ஸ்ம்ருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள். தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

மந்தனா தொடர் முழுவதும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்ததால் தொடர் நாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். கடந்த 2018ஆம் ஆண்டில் ஸ்ம்ருதி மந்தனா 15 போட்டிகளில் விளையாடி இரு சதங்களையும் 8 அரைசதங்களையும் எடுத்திருந்தார்.

அவுஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி இரண்டாம் இடத்திலும், மேக் லேனிங் மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் நான்காம் இடத்திலும் இந்திய அணியின் மிதாலி ராஜ் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers