பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 2 – 0 எனக் கைப்பற்றியுள்ளது


இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 366 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தநிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தினை நிறுத்தியிருந்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 215 ஓட்டங்களை பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.

இதனால் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 319 ஓட்டங்களை முன்னிலை வகித்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடி 3 விக்கெட்டுக்களுக்கு 196 ஓட்டங்களை பெற்றதுடன் விளையாட்டினை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 516 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான இன்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி 366 ஓட்டங்களினால் வெற்றியீட்டியீட்டியுள்ளதுடன் தொடரினையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap