சினிமா பிரதான செய்திகள்

100 நாட்களை கடந்து 96 திரைப்படம் -விழா எடுக்கும் படக்குழு:


பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடித்து, கடந்த ஆண்டு வெளியான 96 படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் காண்பிக்கப்பட்டு வருகின்றது. இச் சாதனையை படக்குழு பெரும் விழாவாக எடுத்து கொண்டாடப்படவுள்ளது.

கடந்த சில வருடங்களாக வெற்றித் திரைப்படம் என்பது வெறுமனே இரண்டு அல்லது மூன்று வாரங்களே காணப்பிக்கப்படுகின்றன. அதன் பின்னர், திரையரங்குகளை விட்டு திரைப்படங்கள் அகற்றப்படுகின்றன. அத்துடன் முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள்கூட ஐம்பது நாட்களை தாண்டுவதில்லை என்றே சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில், விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில், 96 என்ற திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடசாலைப் பருவத்தில் ஏற்படும் முதல் காதலை நெகிழ்ச்சியுடன்  வெளிப்படுத்தியுள்ள இத் திரைப்படம் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பின்னரும் திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் கடந்த ஜனவரி 10ஆம் திகதியுடன் 96 திரைப்படம் 100 நாட்களை அடைந்துள்ளது. இதற்கான விழாவை பெருமளவில் நடாத்துவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது. தர்மதுரை, விக்ரம் வேதா வரிசையில், விஜய் சேதுபதிக்கு 3ஆவது 100 நாட்கள் காண்பிக்கப்பட்ட திரைப்படமாக 96 அமைந்துள்ளது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.