உலகம் பிரதான செய்திகள்

பொலிவியாவில் நிலச்சரிவு – 11 பேர் உயிரிழப்பு :

லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த சில நாட்களாகவே கடுமையான மழை பெய்து வருவதன் காரணமாக தலைநகரின் லா பாஸ்ஸின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாகவும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் போது பல வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வழங்கப்படும் என பொலிவியா அரசு தெரிவித்துள்ளது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers