உலகம் பிரதான செய்திகள்

பாரிசில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேர் காயம்

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் ஏ மற்ற தளங்களுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்ததுடன் தீப்பிடித்த தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைத்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின் போது 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர்.  மேலும் சுமார் 30 பேர் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.