இலங்கை பிரதான செய்திகள்

முகநூல் விருந்துபசாரங்கள் – தீவிர விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவு…


முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில், தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு, காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சகல காவற்துறை நிலைய அதிபர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான விருந்துபசாரங்கள் போதை வர்த்தகர்களின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், இவர்களால் முன்னெடுக்கப்படும் விருந்துபசாரங்களில் விஷ போதைப்பொருள்கள் விநியோகிக்கப்படுவதால் காவல்துறை மா அதிபர் இவைத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விருந்துபசாரங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றமைத் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் காவற்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை ஹிங்குராகொட பிரதேசத்தில் கடந்த 3ஆம் திகதி முகநூல் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டிருந்த 89 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், இவர்களுள் 6 பெண்களும் அடங்குகின்றனர். குறித்த விருந்துபசாரத்தில் ஹெரோய்ன், கஞ்சா, கேரளா கஞ்சா, அஸீஸ், உள்ளிட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.