குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். குருநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநகர் காவல் நிலையம் முன்பாக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் கட்டங்கள் திணைக்களத்தின் பணிப்பாளரான செபஸ்ரியன்பிள்ளை அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலையே குறித்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Add Comment