சினிமா பிரதான செய்திகள்

விஜயின் புதிய படம் ஒரு ஹொலிவூட் திரைப்படம் போன்றது



நடிகர் விஜயின் 63ஆவது திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த திரைப்படம் தென்னிந்திய சினிமா வரலாற்றில் வித்தியாசமான ஒரு திரைப்படமாக இருப்பதாகவும் ஒரு ஹொலிவூட் படம்போல இருப்பதாகவும் தனது இசையமைப்பு அனுபவத்தைக் கூறியுள்ளார்.

அட்லியின் இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிக்கும் விஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடம்பெற்று வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி – விஜய் இணைந்து உருவாக்கும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இத் திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,

இந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹொலிவூட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பேலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது. நான் இசையமைத்த அனைத்து அல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும். இவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வார் அட்லி.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers