இலங்கை பிரதான செய்திகள்

பெங்களுரில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் :

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்தியாவின் பெங்களுரிற்கு சென்றுள்ள நிலையில் அவருக்கெதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுரில் சென்னையை தலைமையிடமாக கொண்ட, ஆங்கில நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோதே கர்நாடகாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கோ பக் ராஜபக்ச என்று கோசங்களை எழுப்பி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இப் போராட்டத்தில் மே 17 இயக்கம், இளந்தமிழகம் இயக்கம் உள்ளிட்ட தமிழக போராட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்களும் பங்குபற்றியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகிந்த ராஜபக்சவை இனப்படுகொலையாளியே இந்தியாவுக்கு வராதே என கோசமிட்டும் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். அத்துடன் நிகழ்வை ஏற்பாடு செய்த பத்திரிகைக்கு எதிராகவும் ஆர்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.