Home சினிமா யோகிபாபுவின் தர்மபிரபு திரைப்படம் நிறைவுறும் தருவாயில்:

யோகிபாபுவின் தர்மபிரபு திரைப்படம் நிறைவுறும் தருவாயில்:

by admin

முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக் நடிக்கும் தர்மபிரபு  திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. யோகிபாபுவின் விததியாசமான நடிப்பை இந்த திரைப்படம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமல், வரலட்சுமி நடித்துள்ள `கன்னிராசி’ திரைப்படத்தை இயக்கிய முத்துகுமரன் இயக்கும் புதிய திரைப்படமே `தர்மபிரபு’. இந்தப் படத்தில் யோகி பாபு, `வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.

முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளம் புகழ்பெற்ற ஏ.வி.எம். கலையகத்தில் பாரியளவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பையும், பாலசந்தர் கலை பணியையும் ஆற்றுகின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் இந்த படத்தை தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More