இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையுடன் நிலையான உறவை, அமெரிக்கா பேண வேண்டும்…

இலங்கையின் அரசியல் குழப்பநிலையும், இனநெருக்கடியும் அமெரிக்காவுடனான இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைகின்ற போதிலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு மத்தியில் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும் என அமெரிக்க உயர்மட்ட இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் செனட் சபையில் ஆயதப்படைகள் குழுவின் விசாரணையின் போது, அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளை பணியகத்தின் தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்ஸன், இலங்கையுடனான அமெரிக்காவின் உறவு தொடர்பில்  இந்த விடயத்தை வலியுறுத்தி உள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap