குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
மன்னார்-அடம்பன் காவல்துறைப் பிரிவில் சுமார் 820 கிலோ கிராம் நிறை கொண்ட பீடி சுற்றும் இலைகள் அடங்கிய பொதிகளை இன்று வியாழக்கிழமை(14) காலை அடம்பன் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவ்விடத்துக்கு சென்ற காவல்துறையினர் அடம்பன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கீலிக்கரையான் கடற்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 13 பொதிகளைக்கொண்ட 820 கிலோ கிராம் எடை கொண்ட குறித்த பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment