அமைச்சர் ரவி கருணாநாயக்கா இன்று முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிலையில் அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றது.
அண்மையில் இந்த சம்பவம் தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Add Comment