இலங்கை பிரதான செய்திகள்

செம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் – பிரதமர் அங்கீகாரம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அங்கீகாித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தொிவித்திருக்கின்றாா்.

வடமாகாணத்திற்கு 3 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணம் பிரதமர் சென்றிருந்தநிலையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது யாழ்.மாநகர முதல்வா்.ஆனோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிாி வரைபை சமா்பித்திருந்ததுடன், பிரதமா் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கியிருந்தாா். இதன்போது கருத்து தொிவித்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க

குறித்த நவீன நகர திட்டம் சிறந்த திட்டம். அத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்கான நிதி மூலங்களை தேடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்த கூட்டத்திலேயே இணக்கம் தொிவித்தார்.

தொடா்ந்து கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த மாநகர முதல்வா் இ.ஆனோல்ட், யா ழ்ப்பாணம்- செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமாா் 293 ஏக்கா் நிலபரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம்.

இதற்கு தேவையான 293 ஏக்கா் நிலப்பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த முறை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது இந்த திட்டம் குறித் த முன்னோட்டத்தினை பிரதமாின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அப்போதே அதனை வரவேற்ற பிரதமா் உடனடியாக தன்னை வந்து சந்தித்து உாிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டிருந்தாா்.

அதற் மைய பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாவட்ட செயலா் என்.வேதநாயகன் ஆகியோருடன் நானும் பிரதமரை சந்தித்து திட்டம் தொடா்பாக விாிவான கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம்.

அதில் எமது திட்டத்தை நடை முறைப்படுத்த தேவையான நிலம் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆழுகைக்குள் இருப்பதனையு ம் சுட்டிக்காட்டியிருந்ததற்கு அமைவாக, பிரதமருடனான கலந்துரையாடல் நிறைவடைந்து 2 வாரங்களிலேயே வனவள பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தேவையான 293 ஏக்கா் நிலத்தை தமது ஆழுகைக்குள் இருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக் கம் தொிவித்தது.

அதற்கமைய கொழும்பிலிருந்து நிபுணா்களை அழைத்துவந்து அந்த காணிகளை அளவீடு செய்துள்ளதுடன் நவீன நகருக்கான மாதிாி ஒன்றையும் தயாா் செய்துள்ளோம். அதனை இன்று பிரதமா் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமா்பித்தபோது அதனை வரவேற்ற பிரதமா் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தொிவித்துள்ளாா் என கூறினாா்.

இதேவேளை குறித்த நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாச்சார வலயம், கல்வி வலயம், சுகாதார அல்லது மருத்துவ வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம்வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடா்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap