சினிமா பிரதான செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கைத் தொடரில் சசிகலாவாக நடிக்கும் விஜி சந்திரசேகர்:


கௌதம் மேனன் இயக்கும் ஜெயலலிதா குறித்த வாழ்க்கைத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க, சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.

தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாக்கப்படுகின்றன. அந்தவகையில் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோரின் வாழ்க்கை குறித்த திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகின்றனர். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் பல்வேறு பெயர்களில் திரைப்படமாக இயக்குகின்றனர்.

இந்த நிலையில், கௌதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகின்றார். இத் தொடர்பின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் ஜெயலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சசிகலாவாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படடது. சர்ச்சையான வேடம் என்பதால் குறித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் தயக்கம் தெரிவித்தனர். சசிகலாவாக விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த விஜி தற்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகின்றார். இதில் வம்சி கிருஷ்ணா சோபன் பாபுவாகவும், இந்திரஜித் எம்.ஜி.ஆராகவும் நடிக்கின்றனர். இந்த படம் விரைவில் இணையதளத்தில் தொடராக வெளியாகவுள்ளது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.