பிரதமர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவுக்கு இன்று சென்றுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது கவனத்தை ஈர்க்கும் வகையிலும், காணாமல் போனோரின் உறவினர்களினால் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு செல்ல முயற்சித்தவேளை அவர்கள், காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தமது பிள்ளைகள் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரையில், எந்வொரு அரசியல் தலைவரையும் நிம்மதியாக வந்துசெல்ல விடப்போவதில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
Add Comment