இலங்கை பிரதான செய்திகள்

புத்தளம், கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி – 19 பேர் காயம்


புத்தளம், கொழும்பு பிரதான வீதியின் மஹாவௌ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து வீதியோரத்தில் உள்ள மின்மாற்றியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.