1
சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ஐரா திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் என தற்காலத்தில் புகழப்படும் நய்னதாரா மாறுபட்ட திரைப்படங்ஙகள் ஊடாக மாறுபட்ட நடிப்புத்திறனை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்து வருகின்றார்.
தற்போது நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ திரைப்படத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளமை சிறப்புச் செய்தியாகும் மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது. சமீபத்தில் தணிக்கையின்போது யு/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தை மார்ச் மாதம் 28ம் திகதி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love