இலங்கை பிரதான செய்திகள்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து -இளைஞர் பலி:

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான முஹம்மது ஜே.ரமீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நீர் குழாய் இணைப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த முஹம்மது ஜே.ரமீஸ் பெக்கோ (ஜே.சி.பி) ரக வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளனார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இடம் பெற்ற விதம் தொடர்பில் உண்மை விபரங்கள் வெளியாகவில்லை.

சம்பவ இடத்துக்கு சென்ற மன்னார் காவல்துறையினர் பெக்கோ (ஜே.சி.பி) வாகனத்தின் சாரதி யை கைது செய்துள்ளடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.