உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்கா-தலீபான்களிடையே புதிய பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளுக்கெதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்கா, அங்கு அமைதியை ஏற்படுத்தும் விதமாக தலீபான்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த நிலையில் அதற்கு தலீபான்களும் சம்மதித்திருந்தனர்.

அந்தவகையில் கடந்த மாத இறுதியில் கட்டாரின் தலைநகர் டோகாவில் நடைபெற்ற பேச்சுவாhத்தையில் ஆப்கன் விவகாரத்தில் தீர்வுகாண ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க இரு தரப்பும் ஒப்புதல் அளித்திருந்த போதும் அதில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தலீபான் பிரதிநிதிகளிடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண நிலைக்கு தீர்வு காண்பது மற்றும் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்ப பெறுவது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.