இலங்கை பிரதான செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் கட்சித் தலைவரும், கொக்கைன் பயன்படுத்துகிறார்?

கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் தொடர்பான தகவல்களை சபாநாயகர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்காகச் செயற்படும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர் ஒருவரும் கொக்கைன் பயன்படுத்துபவர்கள் வரிசையில் இருப்பதாகவும் நீர்கொழும்பு பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொக்கைன் உள்ளிட்ட 11 வகையான போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பான இரத்த பரிசோதனையை மேற்கொள்ள 4200 ரூபாய் செலவாகின்றது எனத் தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் நாள்களில் தான் இந்த பரிசோதனையை மேற்கொண்டு அதன் அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.