Home இலங்கை இணைப்பு 2 – இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவானார்…

இணைப்பு 2 – இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவானார்…

by admin

2019 – 2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்ற நிலையில் தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சில நடைபெற்ற இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்மி சில்வா 83 வாக்குகளையும், ஜயந்த தர்மதாஸ 56 வாக்குகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை கிரிக்கெட்டுக்கான தேர்தல் இன்று


இலங்கை கிரிக்கெட்டுக்கான உறுப்பினர்கள் சபையை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகின்றது. விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் மொஹான் டி சில்வா செயலாளர் பதவிக்கும், ரவீன் விக்ரமரத்ன உப தலைவர் மற்றும் உதவி செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடையில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More