குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை 2790 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் என நேற்று(22) இடம்பெற்ற சிறுபோக குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சி.சத்தியசீலன் பயிர்ச் செய்கையில் விவசாயிகள் நடைமுறை ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் வறட்சியான சூழலை எதிர்கொண்டது. பயிர்ச் செய்கைகள் கூட பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன. இந்நிலையில் தற்போது குளங்களின் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன.
குளங்களின் நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சிறந்த முறையில் சிறுபோக நெற்செய்கையினை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
Spread the love
Add Comment