இலங்கை பிரதான செய்திகள்

மூன்று அம்ச கோரிக்கையை வைத்து துவிச்சக்கரவண்டியில் சுற்றும் சாதனைப்பயணம் – இன்று 14வது நாளாக அட்டனில்


யாழ் பல்கலைக்கழகத்தின்வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றும் சாதனைப்பயணத்தினை மேற்கொள்ளும் வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் 14வது நாளான இன்று (23.02.19)  அட்டனை சென்றடைந்துள்ளார்.

கடந்த 10ம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக இச்சாதனை துவிச்சக்கரவண்டி பயணத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொடி அசைத்து ஆரம்பித்து வைத்திருந்தார்.

இவ் துவிச்சக்கரவண்டிப்பயணம் 2125 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டமையவுள்ளதுடன் மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் நிறைவுறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன் வட மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார்.

இவர் செல்லும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பலர் இவருக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது. 22.02.2019 அன்று யட்டியாந்தோட்டையை வந்தடைந்த இவர் 23.02.2019 அன்று அட்டனை வந்தடைந்தார். 24.02.2019 அன்று நுவரெலியாவை நோக்கி பயணிக்கவுள்ளார்.
(க.கிஷாந்தன்)

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.