உலகம் பிரதான செய்திகள்

38 ஆண்டு சிறை வாழ்வுக்கு 71 வயதில் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள்….

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தவறான கொலை குற்றச்சாட்டிற்காக 38 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் தற்போது நிரபராதி எனத் தெரிய வந்துள்ளதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

தற்போது 71 வயதாகும் கிரேக் கோலே என்னும் அந்த நபர் தனது முன்னாள் தோழி மற்றும் அவரது மகனை கொலை செய்ததாக கூறி கடந்த 1978ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இருந்தபோதிலும், தான் குற்றமற்றவர் என்பதை கிரேக் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அவரது வழக்கு மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  இதன்போது அவரது டிஎன்ஏ மாதிரியின் மூலம் இந்த கொலை சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இத்தனை நீண்ட காலத்திற்கு பிறகு, ஒருவர் விடுவிக்கப்படுவது கலிபோர்னியாவின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்குமென்று கருதப்படுகிறது.

இந்நிலையில், நீதித்துறையின் சார்பில் இழைக்கப்பட்ட தவறை மாற்றமுடியாவிட்டாலும், அவருக்கு நிவாரண தொகையை அளிப்பதன் மூலம் இந்த வழக்கை முடித்து வைக்க விரும்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.