சினிமா பிரதான செய்திகள்

ஜெயம் ரவியின் நீண்டநாள் கனவை நிறைவேற்றிய தயாரிப்பு நிறுவனம்


ஸ்கிரீன் சீன் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் 3 திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கும் ஜெயம் ரவிக்கு அந்த தயாரிப்பு நிறுவனம் அவரது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளது. ஜெயம் ரவி , ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்டஒரு நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்களில் ஜெயம்ரவி நடிக்க ஒப்புக்கொள்ள காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி திரையுலகில் அனைவரிடமும் எழுந்தது. சென்னை நகரில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாக போயஸ் கார்டன் பகுதி இருந்து வருகிறது. இப்பகுதியில் வீடு விலைக்கு வாங்க வேண்டும் என்பது ஜெயம் ரவியின் நீண்ட நாள் கனவு நிறைவேறவுள்ளது.

நிறுவனத்திற்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் சுமார் 20 கோடி மதிப்பில் ஒரு தனிவீடு இருக்கின்றது. அந்த வீட்டை ஜெயம்ரவி வாங்க முயற்சித்த போது பணத்திற்கு பதிலாக தங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தால் வீட்டை தருவதாக கூறியதால் மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.