ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள், இராஜாங்க, பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்குச் சேவையாற்றும்போதும் கருத்துக் கூறும்போதும் மிகவும் பொறுப்புடன், செயற்படவேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கெயின் போதைப்பொருள் பயன்படுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
இந்தநிலையில் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்பில் செயற்படுவதற்கு தனக்கு அதிகாரமில்லையெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேவையேற்படின், இரகசியக் காவல்துறையினரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கம் என்றவகையில் செயற்படமுடியுமெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தன்னுடைய முகப்புத்தகத்தில் 7 இலட்சம் விருப்பத்தைக் கொண்டிருப்போர் உள்ளனர் என்ற வகையில் தான் தெரிவித்துள்ள கருத்துககளை பிரபல்யமான அரசியல் என்றவகையில், கவனம் செலுத்துமாறு கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணர்ச்சிவசப்பட்டு கருத்துரைத்த, ரஞ்சன் ராமநாயக்க, செயற்குழுக் கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கும் முயற்சித்தாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
Add Comment